/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் மண்ணிலும் விளையும் தாய்லாந்து 'வட்சரா' ரக மாம்பழம்
/
நம்மூர் மண்ணிலும் விளையும் தாய்லாந்து 'வட்சரா' ரக மாம்பழம்
நம்மூர் மண்ணிலும் விளையும் தாய்லாந்து 'வட்சரா' ரக மாம்பழம்
நம்மூர் மண்ணிலும் விளையும் தாய்லாந்து 'வட்சரா' ரக மாம்பழம்
PUBLISHED ON : ஜன 10, 2024

'வட்சரா' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
பல்வேறு விதமான மாம்பழங்களை சாகுபடி செய்துள்ளோம். அந்த வரிசையில், தாய்லாந்து நாட்டில், இரு பருவமும் விளையும், 'வட்சரா' ரக மாம்பழத்தை நம்மூர் மண்ணில் சாகுபடி செய்து உள்ளேன்.
இது, மாடி தோட்டத்தில் பெரிய டிரம்மில் வைத்தும் வளர்க்கலாம். நிலங்களில் குறைந்த இடைவெளி விட்டும் நடவு செய்யலாம்.
இந்த ரக மா மரம் குட்டையாக வளரும் தன்மை கொண்டது. இதன் பழங்கள் அதிக சுவையுடன் இருக்கும். அதேபோல, மாங்காயும் புளிப்பு தன்மை இருக்காது. சாப்பிடுவதற்கு ஏற்ற ரகமாக உள்ளது.
தாய்லாந்து நாட்டில், ஒரு ஆண்டிற்கு இரு முறை மகசூல் கிடைப்பதுபோல, நம் நாட்டிலும் ஆண்டிற்கு இரு முறை மகசூல் கொடுக்கிறது.
கோடை காலத்தில் கிடைக்கும் காய்களை அறுவடை செய்து வைத்தாலே பழங்களாக பழுத்து விடும். பிற காலங்களில், கிடைக்கும் மா மகசூல் மரத்திலேயே பழுத்தால் தான், பழம் சுவையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
98419 86400.