/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உரம் தயாரிப்பு
/
ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உரம் தயாரிப்பு
PUBLISHED ON : ஜன 17, 2024

ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி. ராஜேஸ்வரி கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.
உதாரணமாக, மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா ஆகிய உயிர் உரங்களை சேர்த்து, ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உர குருணையாக தயாரிக்கிறோம்.
இதை, நிழலில் உலர்த்திய பின், அதை விவசாயிகள் மற்றும் விற்பனைக்கு அனுப்பி விடுகிறோம்.
இந்த உரம், காய்கறி, பழம், பூ, நெல் உள்ளிட்ட பல்வேறு விதமான செடிகளுக்கு போடலாம்.ஊட்டம் ஏற்றப்பட்ட மண்புழு உரக் குருணை, 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். அனைத்து விதமான பயிர்கள் வளர்வதற்கு ஊக்கியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: டி.ராஜேஸ்வரி,
88257 46684.