/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூரிலும் சாத்தியமாகும் சிவப்பு நிற சலாக் பழம்
/
நம்மூரிலும் சாத்தியமாகும் சிவப்பு நிற சலாக் பழம்
PUBLISHED ON : ஜன 17, 2024

சிவப்பு நிற சலாக் பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா உள்ளிட்ட பல வித பழ செடிகளை நட்டுள்ளேன். வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப் பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன்.
அந்த வரிசையில், தாய்லாந்து நாட்டில் விளையும் சிவப்பு நிற சலாக் பழச்செடி சாகுபடி செய்துள்ளேன். இது, ஏறக்குறைய பேரீச்சை செடி போல இருக்கும். மூன்று அடி உயரத்தில் மட்டுமே வளரும். பழங்கள் செடிக்கடியில் காய்க்கும்.
இந்த சிவப்பு சலாக் பழம், தோலுரித்தால் பழமும் சிவப்பு நிறத்திலும், நுங்குபோல சுவையாக இருக்கும்.
இதன் செடிகள் நட்டு முறையாக பராமரித்தால், நான்கு ஆண்டுகளில் மகசூல் கொடுக்க துவங்கி விடும். வெளிநாடுகளில் விளையும் பழங்கள் என்பதால், நம்மூர் சந்தையில் வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,
89402 22567.