/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
களிமண், சவுடு மண் நிலத்தில் சின்னார் ரக நெல் சாகுபடி
/
களிமண், சவுடு மண் நிலத்தில் சின்னார் ரக நெல் சாகுபடி
களிமண், சவுடு மண் நிலத்தில் சின்னார் ரக நெல் சாகுபடி
களிமண், சவுடு மண் நிலத்தில் சின்னார் ரக நெல் சாகுபடி
PUBLISHED ON : ஜன 17, 2024

சின்னார் ரக நெல் சாகுபடி குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:
அதிகமாக விளையும் பாரம்பரிய நெல் ரகத்தில் சின்னார் ரக நெல்லும் ஒன்று.
இது, நம்மூர் களிமண் மற்றும் சவுடு மண் ஆகிய இரு விதமான மண்ணுடைய நிலத்திலும், சாகுபடி செய்யலாம்.
இது, 120 நாள் முடிந்து அறுவடைக்கு வரும். இந்த நெல்லின் கதிர்கள் ஊதா நிறத்திலும், அறுவடை முன், ரோஜா நிறத்திலும் மாறும் தன்மை உடையது.
நெல் மணிகள், சற்று நீளமாகவும், அதிக துார் களைக்கும் தன்மை உடையது. இது, பருவ மழை காலங்கள் மற்றும் புயலிலும் தாங்கி வளரும் தன்மை உடையது.
முறையான நீர் மற்றும் இயற்கை உரம் நிர்வாகத்தை மேற்கொண்டால், ஏக்கருக்கு, 25 நெல் மூட்டைகள் குறையாமல் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.வீரராகவன்,
98941 20278.