/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தைலாவரத்தில் வரும் 26ல் விளை பொருட்களின் கண்காட்சி
/
தைலாவரத்தில் வரும் 26ல் விளை பொருட்களின் கண்காட்சி
தைலாவரத்தில் வரும் 26ல் விளை பொருட்களின் கண்காட்சி
தைலாவரத்தில் வரும் 26ல் விளை பொருட்களின் கண்காட்சி
PUBLISHED ON : ஜன 24, 2024

விளைப்பொருட்களின் கண்காட்சி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, தைலாவரம் பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை சாகுபடி செய்யலாம்.
இது, மாடித்தோட்டம்மற்றும் விளை நிலங்களில், சாகுபடி செய்யலாம். இந்த பழங்களின் மூலமாக கணிசமான வருவாய் கிடைக்கும்.
குறிப்பாக, எங்கள் தோட்டத்தில் விளைந்த மலைவாழை, செவ்வாழை, வாட்டர் ஆப்பிள், தைவான் கொய்யா, கோல்டன் சீதா பழங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் மூலமாக விளைவித்த விளைப்பொருட்கள் ஜன., 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடைபெற உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, கிரீன் லேன்ட் நர்சரியில் நடைபெறும் கண்காட்சியில், விவசாயிகள் மற்றும் மாடித்தோட்டம் பராமரிப்பாளர்கள் என, அனைத்து தரப்பினரும் இலவசமாக பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு, பி.கிருஷ்ணன்
98419 86400.