PUBLISHED ON : ஜன 24, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்துாளிலும், பலா செடிகள் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மண்புழு உரம் மற்றும் மரத்துாளை பயன்படுத்தி, குறைந்த உயரம் உடைய செடிகளை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், நீண்ட காலம் மகசூல் தரக்கூடிய பலா செடி சாகுபடி செய்துள்ளேன்.
இது, மண்ணில் வளர்வதை போல, வேகமாக வளருகிறது.
இது, வளர்ந்த பின், பெரிய டிரம்மில் மாற்ற உள்ளேன். இரு ஆண்டுகள் கழிந்த பின் தான் மகசூல் குறித்து தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,
88257 46684.