/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
களிமண் நிலத்தில் நன்கு வளரும் ஊதா நிற அவரைக்காய்
/
களிமண் நிலத்தில் நன்கு வளரும் ஊதா நிற அவரைக்காய்
PUBLISHED ON : பிப் 02, 2024

மணல் கலந்த களிமண் நிலத்தில், ஊதா நிற அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதி காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் பூமியில், பல வித அவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். மணல் கலந்த களிமண்ணுக்கு ஊதா நிற அவரைக்காய் நன்றாக வருகிறது.
ஒவ்வொரு செடிக்கும், கொத்தாக காய் பிடிக்கிறது.
மற்ற அவரைக்காய்களை காட்டிலும், ஊதா நிற அவரைக்காய் நிறத்தில் வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் கூடுதலாக விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி. குகன்,
94444 74428.