/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெற்பயிரை தாக்கும் குலைநோய் கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
/
நெற்பயிரை தாக்கும் குலைநோய் கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
நெற்பயிரை தாக்கும் குலைநோய் கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
நெற்பயிரை தாக்கும் குலைநோய் கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
PUBLISHED ON : பிப் 07, 2024

நெற்பயிரை தாக்கும் குலைநோயை கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் கே.ஜெயராமன் கூறியதாவது:
நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களுக்கு, குலைநோய் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.
மேக மூட்டம் மற்றும் குறைந்த வெப்பத்துடன் இருப்பதால், நெற்பயிர்களில் குலை நோய் தாக்கத்திற்கு வழி வகுக்கும்.
இந்த தாக்குதலால், 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெல் மணிகள் முதிர்வு பெறும் போது, இலை, தண்டு, கணு, கழுத்து, கதிர் என அனைத்து பாகங்களிலும் பூஞ்சாணம் தாக்கி இருக்கும். தண்டுப் பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் காணப்படும். ஏறக்குறைய பயிர்கள் எரிந்தது போல காணப்படும்.
இதை தவிர்க்க, சரியான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். வயல், வரப்புகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 மில்லி புராப்பிகொனசோல், 25 சதவீதம் தெளிக்கலாம். ஹெக்சாகொனசோல் ஒரு லிட்டருக்கு 2 மில்லி என, 5 சதவீதத்தை, 15 நாளுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
மேலும், 10 கிராம் சூடோமோனாஸ் துாளை, ஒரு கிலோ விதைக்கு 400 மில்லி நீரில் கலந்து, விதைக்கும் போது குலைநோய் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.ஜெயராமன், 95974 42347.