/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
முட்டை, இறைச்சிக்காக உருவாக்கப்பட்டகினிக்கோழி ரகம்
/
முட்டை, இறைச்சிக்காக உருவாக்கப்பட்டகினிக்கோழி ரகம்
முட்டை, இறைச்சிக்காக உருவாக்கப்பட்டகினிக்கோழி ரகம்
முட்டை, இறைச்சிக்காக உருவாக்கப்பட்டகினிக்கோழி ரகம்
PUBLISHED ON : பிப் 07, 2024

நந்தனம் - 1 ரக கினிக்கோழி பராமரிப்பு குறித்து, காஞ்சிபுரம்மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
நந்தனம் - 1 ரக கினிக்கோழி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இறைச்சி கினிக்கோழி ரகமாகும். இதன் உடலமைப்பு கறுப்பு, வெள்ளை புள்ளிகளுடன் கவர்ச்சியாக இருக்கும்.
இந்த கினிக்கோழி தோட்டம் மற்றும் வீடுகளிலும் வளர்க்கலாம். எப்படி வளர்த்தாலும், காட்டுக்கோழி இறைச்சி போலவே, அதிக புரத சத்து நிறைந்து இருக்கும்.
குறிப்பாக, எல்லா தட்பவெப்ப சூழலிலும் வளரும் தன்மை உடையது. இலைகள், கீரைகள், புற்கள் ஆகியவை தீவனமாக எடுத்துக் கொள்வதால், தீவன செலவு குறைவு.
வீடுகளில் வளர்க்கும் போது, காய்கறி கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்ளும். தோட்டங்களில் வளர்க்கப்படும் போது, மண்ணில் இருக்கும் புழு, பூச்சி, புல் சாப்பிடுவதால் சிறந்த களைக்கொல்லி கோழியாகவும் இருக்கும். பாம்புகளை விரட்டும் தன்மையும் இந்த கினிக்கோழிக்கு உண்டு.
கினிக்கோழி முட்டை நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதால் முட்டை மற்றும் இறைச்சி அதிக நறுமணத்துடன் இருப்பதால், இருவித வளர்ப்பிற்கு கினிக்கோழி வளர்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.