/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி
/
மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி
மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி
மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி
PUBLISHED ON : பிப் 14, 2024

'அகாய்' பெர்ரி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை நட்டுள்ளேன். வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், 'அகாய்' பெர்ரி சாகுபடி செய்துள்ளேன். இது, அமெரிக்கா, பிரேசில் ஆகிய பகுதிகளில், அதிக சாகுபடி செய்யப்படும் ரகமாகும்.
இது, பாக்கு மரம் குடும்பத்தைச் சார்ந்தது. காய்கள் பச்சையாகவும், பழங்கள் ஊதா நிறத்திலும் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும், பழங்கள் கொத்துக் கொத்தாக காய்க்கும் தன்மை உடையது.
இந்த பழத்தில், அதிக சத்து நிறைந்து இருப்பதால், சந்தையில் எப்போதும் வரவேற்பு உள்ளது. மேலும், ஜெல்லி, ஜாம் போன்ற மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து, விற்பனை திறனுக்கு ஏற்ப அதிக வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.