PUBLISHED ON : பிப் 14, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், பிப்.,19ம் தேதி முதல், பிப்., 24ம் தேதி வரையில், ஆறு நாட்கள் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை, போட்டோ, ஜாதி சான்று ஆகிய ஆவணங்களுடன், நாளை மறுதினத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
முதலில் பதிவு செய்யும், 28 நபர்களுக்கு மட்டுமே, முன்னுரிமைஅளிக்கப்படும்.
தொடர்புக்கு: பேராசிரியை கே.பிரேமவல்லி,
044- 27264019 / 8870020916.