/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி
/
மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி
PUBLISHED ON : பிப் 21, 2024

மலை மண்ணில், லோங்கான் பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
குளிர் பிரதேசங்களில் விளையும், லோங்கான் பழம் சாகுபடி செய்துள்ளேன். இந்த லோங்கான் பழம் மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், சாகுபடி செய்யலாம். மகசூல் மூலமாக, கணிசமான வருவாய் கிடைக்கும்.
ஒட்டு கட்டிய மரமாக இருந்தால், இரண்டு ஆண்டுகளில் விளைச்சல் கொடுக்கும். விதை செடியாக இருந்தால், ஏழு ஆண்டுகளுக்கு பின்தான் மகசூல் கொடுக்கும்.
இதில், இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில், லோங்கான் பழ மேல்புற தோல் இருக்கும். நுங்கு போல வெள்ளை நிறத்தில் இருக்கும்.
குறிப்பாக, லிச்சி குடும்பத்தைச் சேர்ந்த வகை என்பதால், கோடை சீசனில் மட்டுமே விளையும்.
ஆண்டிற்கு ஒரு முறை மகசூல் கொடுத்தாலும், கணிசமான வருவாய் கிடைக்கக்கூடிய அளவிற்கு, மகசூல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:கே.வெங்கடபதி,
93829 61000.