/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கணிசமான வருவாய் தரும் உ.பி., ரக 'கினிக்கோழி'கள்
/
கணிசமான வருவாய் தரும் உ.பி., ரக 'கினிக்கோழி'கள்
PUBLISHED ON : பிப் 21, 2024

உ.பி., ரக கினிக்கோழி வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
கடம்பரி, சிற்றம்பரி, செடம்பரி ஆகிய ரக கினிக்கோழி, உ.பி., மாநிலம் ஈசாட் நகர் மத்திய கோழி இன ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட இறைச்சி ரக கினிக்கோழியாகும். இதன் உடலமைப்பு, பிற கினிக்கோழியுடன் மாறுபட்டு இருக்கும். இந்த கினிக்கோழி திறந்தவெளி மற்றும் கொட்டகை முறையிலும் வளர்க்கலாம்.
குறிப்பாக, நம்மூர் தட்பவெட்ப சூழலிலும் வளரும் தன்மை உடையது. குறைந்த வயதில் முட்டை போடும் தன்மையும், அதிக எடையுடன்கூடிய இறைச்சிக்கு வரும் தன்மையும் உடையது.
கொட்டகை என அழைக்கப்படும் பண்ணைகளில் வளர்க்கும் போது, காய்கறி கழிவுகளை உணவாக கொடுக்கலாம். திறந்தவெளி மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது, புல், புழு, பூச்சி சாப்பிடுவதால் தீவனம் செலவு குறைவாக இருக்கும். முட்டை மற்றும் இறைச்சிக்கு விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.