/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக சுவை கொண்டவை 'சர்க்கரை குட்டி' ரக மாம்பழம்
/
அதிக சுவை கொண்டவை 'சர்க்கரை குட்டி' ரக மாம்பழம்
PUBLISHED ON : பிப் 21, 2024

சர்க்கரை குட்டி ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் களிமண், செம்மண் விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், அனைத்து விதமான பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், சர்க்கரை குட்டி ரக மா மரத்தை விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
இந்த ரக மாம்பழம், கொத்து கொத்தாகவும், சிறியதாகவும், அதிக சுவையுடன் இருக்கும்.பிற ரக மாம்பழங்களை காட்டிலும், அதிக மகசூல் கிடைக்கும். அதிக சுவையுடன் இருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும், மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
94455 31372.