/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செம்மண்ணிலும் சாகுபடியாகும் கருப்பு கவுனி ரக நெல்
/
செம்மண்ணிலும் சாகுபடியாகும் கருப்பு கவுனி ரக நெல்
PUBLISHED ON : பிப் 28, 2024

மணல் கலந்த செம்மண் நிலத்தில், கருப்பு கவுனி ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், மணல் கலந்த செம்மண் நிலத்தில், கருப்பு கவுனி பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
பொதுவாக, பாரம்பரிய ரக நெல்லை பொருத்தவரையில், களிமண், சவுடுமண் நிலத்தில் சாகுபடி செய்யும்போது அதிக மகசூல் ஈட்ட முடியும்.
செம்மண் நிலத்தில், காய்கறி மற்றும் பயறு வகை பயிர்களை மட்டுமே சாகுபடி செய்ய முடியும். முதல் முறையாக, செம்மண் நிலத்திலும் கருப்பு கவுனி பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
கருப்பு கவுனி ரக நெல்லை பொருத்தவரையில், நெல் கதிர் எடுக்கும் போது இளஞ்சிவப்பு நிறத்திலும், நெற்கதிர் முதிர்ந்த பின், கருப்பு நிறத்திலும் இருக்கும்.
கருப்பு கவுனி அரிசியில் அனைத்து வித நோய் தீர்க்கும் உணவுப்பொருளாக இருப்பதால் சந்தையில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,
96551 56968.