/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி
/
மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி
PUBLISHED ON : பிப் 28, 2024
இந்தியாவில் 2018 முதல் மக்காச்சோளத்தில் மக்காச்சோள படைப்புழுக்கள் ஊடுருவி அதிக தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
சமீப காலமாக அதிகரித்து வரும் மக்காச்சோளப் படைப்புழு தாக்குதலுக்குரிய காரணங்களை கண்டறிய பல்கலை ஆராய்ச்சி செய்து வருகிறது. இறுதி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு
இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்றளவில் சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம் + தயோமீத்தாக்சம் 19.8 சதவீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இறவை பாசனத்தில் தட்டை பயிர், எள், துவரை அல்லது சூரியகாந்தியும், மானாவாரியில் தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும்.
படைப்புழுக்களின் தாய் அந்திப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். படைப்புழுவின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் பருவத்திற்கேற்ப பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும்.
பயிர் முளைத்த 15 முதல் 20 நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குளோரான்டரினிலிபுரோல் 18.5 எஸ்சி அல்லது புளுபென்டமைடு 480 எஸ்சி அல்லது 5 மில்லி அசாடிராக்டின் 1500 பி.பி.எம். தெளிக்க வேண்டும். முதிர் குருத்து நிலையான 35 முதல் 40 நாளில் ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் அனைசோபிலியே தெளிக்க வேண்டும் அல்லது லிட்டருக்கு 0.4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி / அல்லது லிட்டருக்கு 1.5மில்லி நொவலுரான் 10 சதவீத இ.சி. அல்லது 0.5 மில்லி ஸ்பைனிடிரோம் 11.7 எஸ்சி. தெளிக்க வேண்டும்.
பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால் முதிர் குருத்து நிலையில் தெளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சி கொல்லியினை தெளிக்க வேண்டும்.
-சீனிவாசன்இணைப் பேராசிரியர்பூச்சியியல் துறை,
மருதாச்சலம்இணைப் பேராசிரியர் பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை