/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செம்மண்ணிலும் சாகுபடியாகும் தாய்லாந்து இனிப்பு செர்ரி
/
செம்மண்ணிலும் சாகுபடியாகும் தாய்லாந்து இனிப்பு செர்ரி
செம்மண்ணிலும் சாகுபடியாகும் தாய்லாந்து இனிப்பு செர்ரி
செம்மண்ணிலும் சாகுபடியாகும் தாய்லாந்து இனிப்பு செர்ரி
PUBLISHED ON : மார் 06, 2024

தாய்லாந்து இனிப்பு செர்ரி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் களி மண், செம்மண்ணில், அனைத்து விதமான பழ மரங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், புதுமையான பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், நம்மூர் செம்மண் நிலத்தில், தாய்லாந்து இனிப்பு செர்ரி பழம் சாகுபடி செய்துள்ளேன். செடி நன்றாக வளர்கிறது.
குறிப்பாக, எந்த ஒரு பழ மரம் சாகுபடி செய்தாலும், பழமரக் கன்றுகள் சுற்றிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு, வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த தாய்லாந்து இனிப்பு செர்ரி பழங்களை பொறுத்தவரையில், கொத்துக் கொத்தாக காய்க்கக்கூடிய தன்மை உடையது. சில செர்ரி பழங்கள் லேசான புளிப்பு தன்மையுடன் இருக்கும்.
இந்த தாய்லாந்து இனிப்பு செர்ரியில் புளிப்பு தன்மை அறவே கிடையாது. இதில், மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
94455 31372.