/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இருவித வருவாய் தரும் காட்டு பாதாம்
/
இருவித வருவாய் தரும் காட்டு பாதாம்
PUBLISHED ON : மார் 06, 2024

காட்டு பாதாம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த, புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாய பண்ணை நிர்வாகி ப.அவினாஷ் கூறியதாவது:
சவுடு மண் நிலத்தில், பங்கனபள்ளி, அல்போன்சா, பெங்களூரா உள்ளிட்ட பல வித மரங்களை சாகுபடி செய்து உள்ளோம்.
அந்த வரிசையில், வேலி பயிராக காட்டு பாதாம் செடிகளை நட்டு உள்ளோம். இது, காட்டு பாதாம் பருப்புகளாக தரம் பிரிக்கவும், மரப்பொட்கள் செய்வதற்கும், இந்த மர சாகுபடி பயன்படுத்தலாம்.
குறிப்பாக, காட்டு பாதாம் செடிகள், நிழல் தரும் மரமாகவும், குறிப்பிட்ட ஆண்டிற்கு பின், மரப்பொருட்கள் தயாரிக்கவும் உதவுகின்றன.
இதை வரப்பு பயிராக சாகுபடி செய்தால், வேலியாகவும், முதிர்வுக்கு பின், வருவாய் தரும் பயிராகும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ப.அவினாஷ்,
93443 45382.