PUBLISHED ON : ஏப் 17, 2024

சிப்பி காளான் உற்பத்தி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி. மாதவி கூறியதாவது:
இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், தென்னங்கீற்று கொட்டகையில், குளுமையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிப்பி காளான் உற்பத்தி செய்து வருகிறேன்.
குறிப்பாக, காளான் வளர்ப்பை பொறுத்தவரையில், ஒரே நேரத்தில் விதை போட்டு, ஒரே நேரத்தில் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும். காளான் விதைகளை பாலிதீன் கவர்களில் போடும் போது, அறுவடை செய்யும் நாட்களின் இடைவெளிக்கு ஏற்ப, பாலிதீன் பைகளில் விதை விதைக்க வேண்டும்.
அப்போது தான், காளான் அறுவடை செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் சவுகரியமாக இருக்கும். இதன் மூலமாக கணிசமான வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:.மாதவி, 97910 82317.