/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்திலும் சாகுபடியாகும் மார்க்கெட் லெமன் ரகம்
/
மாடி தோட்டத்திலும் சாகுபடியாகும் மார்க்கெட் லெமன் ரகம்
மாடி தோட்டத்திலும் சாகுபடியாகும் மார்க்கெட் லெமன் ரகம்
மாடி தோட்டத்திலும் சாகுபடியாகும் மார்க்கெட் லெமன் ரகம்
PUBLISHED ON : ஏப் 17, 2024

மார்க்கெட் லெமன் ரக சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், மார்க்கெட் லெமன் ரகம் சாகுபடி செய்யலாம். இது, ஒட்டு ரக செடியாகும். ஒரு ஆண்டில் விளைச்சல் கொடுக்கக் கூடிய உயர் ரகமாகும்.
குறிப்பாக, மார்க்கெட் லெமன் ரக சாகுபடி செய்யும் போது, அதில் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். இதை விரட்டுவதற்கு வேப்பம் புண்ணாக்கு மற்றும் மண்புழு உரம் போடலாம்.
இந்த மார்க்கெட் லெமனுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், விவசாயிகள் கணிசமான மகசூல் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
94455 31372.