/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மணல் கலந்த களிமண் நிலத்தில் 'காலா நமக்' ரக நெல் சாகுபடி
/
மணல் கலந்த களிமண் நிலத்தில் 'காலா நமக்' ரக நெல் சாகுபடி
மணல் கலந்த களிமண் நிலத்தில் 'காலா நமக்' ரக நெல் சாகுபடி
மணல் கலந்த களிமண் நிலத்தில் 'காலா நமக்' ரக நெல் சாகுபடி
PUBLISHED ON : மே 29, 2024

காலா நமக் பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ்.சண்முகம் கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், காலா நமக் நெல் தனி ரகமாகும். மணல் கலந்த களி மண் நிலத்தில், காலா நமக் ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். இது, 125 நாளில் விளைச்சல் தரக்கூடிய ரக நெற்பயிராகும்.
இந்த நெல் சாகுபடியில், எவ்வித நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் வராது. இதன் நெல் மணிகள், கருப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
ஒரு ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய ரகத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி, விற்பனை செய்யும்போது, கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இந்த அரிசி, சாப்பிடுவதன் மூலமாக, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு, அதிக எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும். மூளையின் செயல்பாடுகளை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
கர்ப்பிணியரின் கர்ப்ப காலத்தில் வரும், சிறிய சிறிய தொந்தரவுகளை சரி செய்யக்கூடிய தன்மை உள்ளது. உடல் பலம் பெற காலா நமக் அரிசி உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.சண்முகம்,
95432 83963.