/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கழுத்தறுத்தான் கோழிகளுக்கு தனி மவுசு!
/
கழுத்தறுத்தான் கோழிகளுக்கு தனி மவுசு!
PUBLISHED ON : ஜூன் 26, 2024

கழுத்தறுத்தான் கோழி வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா ஆகிய பல வித பழ மரங்கள் மற்றும் தேக்கு, ஈட்டி, வேங்கை மரப்பொருட்களை செய்யும் மரங்கள், ஆடு, மாடு, கோழி ஆகிய ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து வருகிறேன்.
இதில், கழுத்தறுத்தான் கோழி வளர்த்து வருகிறேன்.
இது, பிற நாட்டுக்கோழியை காட்டிலும் சற்று மாறுபட்டது. கழுத்து பகுதி முழுதும் முடி உதிர்ந்து, தோல் மட்டும் வெளியே தெரியும் அளவிற்கு இருக்கும்.
சிறுவிடை மற்றும் பெருவிடை கோழிகளில், கழுத்தறுத்தான் கோழி கிடைக்கும் போது, இனப்பெருக்கத்திற்கு உபயோகப்படுத்தலாம்.
சந்தையில், கழுத்தறுத்தான் கோழிகளுக்கு என, தனி மவுசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,
89402 22567.