ADDED : மார் 06, 2025 12:44 AM

பெங்களூரு:மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்களின் 26 லட்சம் போலி அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, அமைச்சர் சந்தோஷ் லாட் கூறி உள்ளார்.
சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் மகேஷ் தெங்கினகாயி எழுப்பிய கேள்விக்கு, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் அளித்த பதில்:
மாநிலத்தில் 56 லட்சம் கட்டுமான தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்தபோது, முதற்கட்டமாக 26 லட்சம் போலி என்பது தெரிந்தது.
போலி அட்டைகளை உடனடியாக ரத்து செய்துள்ளோம். தொடர்ந்து அடையாள அட்டைகளை சரிபார்த்து வருகிறோம். போலி என்றால் ரத்து செய்வோம்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை, திருமண உதவிக்காக தொழிலாளர் நலத்துறைக்கு 1,57,514 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 1,06,191 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சேவா மையம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.