/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
/
புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
புதிதாக 52 இந்திரா உணவகங்கள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஆக 02, 2025 01:42 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் 2017ல், வார்டுக்கு ஒன்று வீதம் இந்திரா உணவகம் திறக்க திட்டம் வகுத்தது.
ஆனால் சரியான இடம் கிடைக்காததால், கட்டடம் கட்ட முடியவில்லை. 174 உணவக கட்டடங்கள் கட்டப்பட்டன. 24 மொபைல் இந்திரா உணவகங்கள் துவக்கப்பட்டன.
தற்போது 160 உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பல காரணங்களால் சில உணவகங்கள் மூடப்பட்டன.
தற்போது பெங்களூரு மாநகராட்சி வார்டு எண்ணிக்கை, 198லிருந்து, 225 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் கட்டும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே புதிதாக 52 உணவகங்கள் கட்ட திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்த டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. தகுதியான ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்படும்.
அடுத்த வாரம் டெண்டர் ஆய்வு செய்து, பணிகளை துவக்கும்படி உத்தரவிடப்படும். புதிய உணவகங்கள் கட்ட, இடங்களும் அடையாளம் காணப்பட்டன. இன்னும் 10 முதல் 12 உணவகங்களுக்கு இடம் தேடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.