/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுத்திகரிக்கப்படாத கே.சி., வேலி நீர் தேவையில்லை சுத்திகரிக்கப்படாத கே.சி., வேலி நீர் தேவையில்லை ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் ஷிவா ரெட்டி கண்டிப்பு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கண்டிப்பு

ADDED : செப் 01, 2025 03:50 AM
சீனிவாசப்பூர்:''கே.சி.வேலி குடிநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வழங்க வேண்டாம். இந்த நீர் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தகுதியானதல்ல,'' என்று சீனிவாசப்பூர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் ஷிவா ரெட்டி தெரிவித்தார்.
சீனிவாசப்பூர் திம்மசந்திரா கிராம பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கே.சி., எனும் கோரமங்களா - செல்லகட்டா திட்ட குடிநீர் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தகுதியானதல்ல.
அந்த நீரை மூன்றாம் கட்டமாக சுத்திகரிப்பு செய்த பின் தான் வழங்க வேண்டும். இல்லையேல் இத்தாலுகாவில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டாம்.
எத்தினஹோலே நீரை 2027க்கு சப்ளை செய்வதாக துணை முதல்வர் சிவகுமார் உறுதி அளித்துள்ளார். அடுத்த மாதம் 67 கிலோ மீட்டர் துாரம் பைப் லைன் பதிக்க பூமி பூஜை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனிவாசப்பூர் தொகுதியில் ஏழு மண்டலங்களில் 400 கிராமங்கள் உள்ளன தொகுதியில் எல்லா கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது எனது கனவு. ஆனால், மாநில அரசு போதிய நிதி உதவி வழங்குவதில்லை.
தொகுதியில் வீடில்லாதோருக்கு வீடுகள் கட்டித் தருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீட்டு வசதி துறை மூலம் கிராமங்களில் வீடு கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் மாநில அரசு நிதி ஒதுக்க வில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கோலார் தொகுதி ம.ஜ.த., - எம்.பி. மல்லேஸ்பாபு, ம.ஜ.த., மாவட்ட மகளிர் அணி தலைவர் காயத்ரி, ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் தொப்பள்ளி நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.