/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் வேலையில் சேர வயது வரம்பில் தளர்வு
/
போலீஸ் வேலையில் சேர வயது வரம்பில் தளர்வு
ADDED : செப் 30, 2025 11:59 PM

பெங்களூரு: ''போலீஸ் வேலையில் சேர வயது வரம்பில் நிரந்தர தளர்வு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தளர்வு அறிவிக்கப்படும்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரு சதாசிவ நகரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களின் வயது தளர்வு 2027 வரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். போலீஸ் துறையில் சேர வயது வரம்பில் நிரந்தர தளர்வு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த தளர்வு போலீசில் இணையும் சப் - இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஏட்டுகளுக்கும் பொருந்தும். அண்டை மாநிலங்களில் அரசு ஊழியர்களின் வயது தளர்வு குறித்து தகவல் பெற்று வருகிறோம். விரைவில் தளர்வு பற்றி அறிவிக்கப்படும்.
ஜாதிவாரி சர்வே மூலம் நிலைமை அறியப்படும். சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை அறியப்படும். மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை ஆய்வில் நாம் பங்கேற்கவில்லை என்றால், என்ன நடக்கும்? இதை பா.ஜ.,வினர் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வே பணிகளை முடிப்போம். இந்த சர்வே எங்கள் மாவட்டத்தில் விரைவில் முடிந்துள்ளது.
அமைச்சரவை மாற்றம், முதல்வரின் விருப்பப்படி நடக்கும். இந்த மாற்றம் செய்வது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. சிலர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அமைச்சரவை மறுசீரமைப்புக்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இது குறித்து எங்களுக்கு தெரியாது.
இது குறித்து உயர்மட்ட குழுவும், முதல்வரும், மாநில தலைவரும் கூறவில்லை. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.
இவ்வாறு கூறினார்.