/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மலர் கண்காட்சியில் மக்கள் வெள்ளம்; கோலப்போட்டியில் மாணவியர், பெண்கள் கலக்கல்

ADDED : டிச 01, 2025 04:48 AM
பெங்களூரு: கப்பன் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சிக்கு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆறு மாத குழந்தை முதல் 60 வயது வரையிலான முதியோர் வரை கூட்டம் அலைமோதியது.
கர்நாடகா தோட்டக்கலை துறை சார்பில் கப்பன் பூங்காவில் நவ., 27ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. டிச., 7 ம் தேதி வரை கப்பன் பூங்கா பாலபவன் அருகிலுள்ள பேண்ட் ஹவுஸ் அருகில் நடக்கிறது.
கண்காட்சியில் வன விலங்கு, வாகனங்கள், பறவைகள் போன்றவை மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கமாக வருவோரை விட, ஏராளமானோர் வருகை தந்தனர்.
நேற்று குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. குடகு, போலீஸ், ஒலக்கை ஓபவ்வா, மேற்கத்திய நாகரீகம் என பல உடைகளில் அசத்தினர். பெண்களுக்கான கோலப்போட்டியும் நடத்தப்பட்டது.
சமீபத்தில் மறைந்த இயற்கை ஆர்வலர் 'சாலமரத திம்மக்கா' நினைவாக அவரின் புகைப்படம் வைத்து, கோலம் போடப்பட்டிருந்தது.
இத்துடன் பூக்கள், காய்கறிகளால் சிவலிங்கம், கோலப்பொடியில் ராகவேந்திர சுவாமிகள், தட்சிண கன்னடா பாரம்பரிய யக் ஷகானா கலை என 50க்கும் மேற்பட்ட விதவிதமான கோலங்கள் போடப்பட்டிருந்தன.
அதிகாலை முதலே சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் குடை பிடித்தபடி வந்தனர். பலர் 'செல்பி' எடுத்து கொண்டும், 'ரீல்ஸ்' எடுத்து கொண்டும் சுற்றினர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த செடிகளை, ஆர்வமுடன் பலரும் வாங்கி சென்றனர்.
கப்பன் பூங்கா நிர்வாகிகளே, மலர் கண்காட்சிக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்தாண்டு இன்னும் பிரமாண்டமாக நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.