தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல் உறுப்பு தானத்தில் கர்நாடகாவுக்கு 3வது இடம்

 உடல் உறுப்பு தானத்தில் கர்நாடகாவுக்கு 3வது இடம்

 உடல் உறுப்பு தானத்தில் கர்நாடகாவுக்கு 3வது இடம்


ADDED : நவ 30, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: உடல் உறுப்புகளை தானம் செய்ய, ஆன்லைன் மூலம் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்துள்ள மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டி:

உடலுறுப்புகள் தானம் குறித்து, மக்களுக்கு மாநில அரசு தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறது. இதன் பயனாக உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

உடலுறுப்பு தானம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு 'எக்சலன்ஸ் இன் புரமோஷன் ஆ ப் ஆர்கன்' விருது வழங்குகிறது. 2024 - 25ம் ஆண்டுக்கான விருது, கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்ய, ஆன்லைன் மூலம் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்துள்ள மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதை மத்திய அரசு அடையாளம் கண்டு, விருது அறிவித்துள்ளது.

நம் இறப்புக்கு பின், உடல் உறுப்புகளை மண்ணில் புதைப்பது அல்லது எரிப்பதற்கு பதிலாக, தேவை உள்ளவர்களுக்கு தானம் செய்து, உயிரை காப்பாற்றலாம். ஒரு நபரின் முடிவு எட்டு உயிர்களை காப்பாற்றும். உடல் உறுப்புகளை தானம் செய்து, நாம் இறந்த பின்னரும் மற்றவருக்கு வெளிச்சத்தை அளித்து வாழ்வளிக்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது,

அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று, உடல் உறுப்பு தானம் செய்ய, பதிவு செய்து கொள்ளலாம். தாமதிக்காமல் குடும்பத்துடன் அமர்ந்து பேசி, நல்ல முடிவை எடுக்கலாம். இதன் மூலம் மற்றவரை ஊக்கப்படுத்தலாம், நம் மாநிலத்தில் ஏற்கனவே 52,304 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதாக, பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us