/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் சித்துவிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
/
பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் சித்துவிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் சித்துவிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் சித்துவிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
ADDED : மார் 14, 2025 06:52 AM

பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் அரசு பணிகளை மேற்கொண்ட, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீத கமிஷன் கேட்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில், கிராம பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக ஈஸ்வரப்பா பணியாற்றினார்.
இந்த துறையில் நடந்த பணிகளை, பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் ஒப்பந்தம் எடுத்து செய்தார்.
பில் தொகை விடுவிக்க, ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக சந்தோஷ் குற்றஞ்சாட்டி இருந்தார். பின், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஒப்பந்ததாரர் சங்க தலைவராக இருந்த கெம்பண்ணா, தங்களிடம் அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக, குற்றஞ்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு எதிராக 'பே சி.எம்' போஸ்டர் பிரசாரம் செய்தது. இது தேசிய அளவில் எதிரொலித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், 40 சதவீத கமிஷன் குறித்து, ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு விசாரணை அறிக்கையை, சித்தராமையாவிடம், நாகமோகன் தாஸ் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை 20,000 பக்கங்களை கொண்டுள்ளது.
கடந்த 2019 முதல் 2023 வரை, அரசின் ஐந்து முக்கிய துறைகளில் நடந்த பணிகள் குறித்து, அனைத்து தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மேலும் மற்ற துறைகளில் நடந்த பணிகள் குறித்தும், தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர ராய்ச்சூர் நாராயணபுரா அணையில் இருந்து கால்வாய்க்கு, தண்ணீர் திறக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் 1,800 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள தகவல்களை வைத்து, பா.ஜ., தலைவர்கள் வாயை அடைக்க அரசு தயாராகி வருகிறது.
இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 'காங்கிரஸ் 60 சதவீத கமிஷன் அரசு' என, சித்தராமையாவின் புகைப்படத்தை வெளியிட்டு, பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.