/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிந்து நபரை சாப்பிட விடாமல் வெளியேற்றிய முஸ்லிம் குடும்பம்
/
ஹிந்து நபரை சாப்பிட விடாமல் வெளியேற்றிய முஸ்லிம் குடும்பம்
ஹிந்து நபரை சாப்பிட விடாமல் வெளியேற்றிய முஸ்லிம் குடும்பம்
ஹிந்து நபரை சாப்பிட விடாமல் வெளியேற்றிய முஸ்லிம் குடும்பம்
ADDED : நவ 01, 2025 04:23 AM
பெங்களூரு: விருந்து நிகழ்ச்சியில், பந்தியில் அமர்ந்திருந்த ஹிந்து நபரை சாப்பிட விடாமல், முஸ்லிம் சமுதாயத்தினர் வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின் இஸ்லாம்புராவில் வசிப்பவர் சமீவுல்லா. இவரது குடும்பத்தின் முஜாமில், சானியாவுக்கு நேற்று முன் தினம் திருமணம் நடந்தது. சமீவுல்லா உறவினர் அழைத்ததால், இந்நிகழ்ச்சிக்கு ராஜு என்பவர் வந்திருந்ததார்.
விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. ராஜுவும் பந்தியில் அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்.
இவரை கவனித்த அங்கிருந்த சிலர், 'உங்களை யார் அழைத்தது, ஹிந்துக்களுக்கு நாங்கள் உணவளிக்க மாட்டோம். எழுந்து வெளியே செல்லுங்கள்' என, கூறி வெளியேற்றினர்.
அப்போது அங்கிருந்த மற்றொரு ஹிந்து நபர், நடந்த சம்பவத்தை தன் மொபைல் போனில் பதிவு செய்து கொண்டார். 'நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு, இப்படி அவமதிக்கக் கூடாது.
' ஹிந்துக்கள் வரக்கூடாது என்றால், நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக் கூடாது. உணவுக்கு அமர்ந்தவரை அவமதித்தது ஏன்? வீட்டினர் ஹிந்துக்களுக்கு உணவளிக்க மாட்டார்களாம். வாருங்கள் வெளியே செல்லலாம்' என, ராஜுவிடம் அவர் கூறியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. 'நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தவரை, எழுப்பி அனுப்பியது தர்மம் அல்ல. உங்கள் வீட்டு வாசலில் நின்று, குங்குமம் வைத்தவர்களை உள்ளே விடாமல் தடுத்திருக்க வேண்டும்' என, பலரும் கண்டித்துள்ளனர்.

