/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகர மேம்பாட்டுத் துறை முடிவு முதல்வருக்கு ஆம் ஆத்மி கடிதம்
/
நகர மேம்பாட்டுத் துறை முடிவு முதல்வருக்கு ஆம் ஆத்மி கடிதம்
நகர மேம்பாட்டுத் துறை முடிவு முதல்வருக்கு ஆம் ஆத்மி கடிதம்
நகர மேம்பாட்டுத் துறை முடிவு முதல்வருக்கு ஆம் ஆத்மி கடிதம்
ADDED : மார் 13, 2025 12:19 AM

பெங்களூரு: மாநிலத்தில் தனியார் லே - அவுட்கள் அமைக்க, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்கும் திட்டத்தை தடுக்க வேண்டுமென, முதல்வர் சித்தராமையாவுக்கு ஆம் ஆத்மி மாநில தலைவர் 'முக்கிய மந்திரி' சந்துரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் தரமான லே - அவுட் அமைத்து, மக்களுக்கு கைக்கு எட்டும் விலையில் விற்கின்றன. இதனால் நடுத்தர மக்கள் வீடு கட்ட முடிகிறது.
இதுவரை 1961ன் சட்டப்படி நகர மேம்பாட்டு ஆணையங்கள், தனியார் நிறுவனங்கள் லே - அவுட் அமைக்க, அனுமதி அளித்தன. ஆனால் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாநிலத்தில் தனியார் லே - அவுட் அமைக்க துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, சட்டத்திருத்தம் கொண்டு வரும்படி, செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த உத்தரவு, அரசியல் சாசன நோக்கத்துக்கு எதிரானது.
நகர மேம்பாட்டுத் துறையில் நேரடியாக ஊழல் செய்யும் நோக்கில், இதுபோன்ற சட்ட திருத்தம் கொண்டு வர முற்பட்டுள்ளார். இந்த திருத்தம் நகர திட்ட ஆணையங்களின் அதிகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு, சட்ட திருத்த திட்டத்தை நிறுத்த வேண்டும். நடக்கவுள்ள ஊழலையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.