/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தரமற்ற மருந்துகள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
தரமற்ற மருந்துகள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தரமற்ற மருந்துகள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தரமற்ற மருந்துகள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : மார் 06, 2025 12:30 AM

பெங்களூரு:தரமற்ற மருந்துகளை வழங்கிய, மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
சட்டசபையில் ம.ஜ.த., உறுப்பினர் சரண்கவுடா கந்தகூர் கேட்ட கேள்விக்கு, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பதில்:
தரமற்ற மருந்து விநியோகத்தால் கர்ப்பிணிகள் தொடர் மரணம் அடைந்ததை, அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு, தரமற்ற மருந்துகளை வழங்கிய மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த நிறுவனங்களிடம் இருந்து மருந்து வாங்குவதை நிறுத்தி உள்ளோம்.
மக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை தயாரிக்கும், மருந்து நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.