/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் காங்., - எம்.எல்.ஏ., ரவிகுமார் ஆவேசம்

ADDED : மார் 04, 2025 04:55 AM

பெங்களூரு: ''கர்நாடகாவுக்கு வர நேரம் இல்லை என்று கூறிய, நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்,'' என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கன்னட திரைத்துறையினருக்கு நட், போல்ட் கழன்றுள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறியது சரிதான்.
கடந்த ஆண்டு பெங்களூரு திரைப்பட திருவிழாவிற்கு, நடிகை ராஷ்மிகா மந்தனாவை அழைக்க, நாங்கள் ஹைதராபாத் சென்று இருந்தோம். நான் வசிப்பது இங்கு; கர்நாடகாவுக்கு வர நேரம் இல்லை என, எங்களிடம் கூறினார்.
கிரிக் பார்ட்டி கன்னட திரைப்படம் தான், ராஷ்மிகாவுக்கு வாழ்க்கை கொடுத்தது. இங்கு பிறந்த அவர், கர்நாடகாவுக்கு வர மறுக்கிறார். அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். சினிமா துறைக்கு வழங்கும் மானியங்களை நிறுத்தும்படி முதல்வர், துணை முதல்வருக்கு நான் கடிதம் எழுதுவேன்.
ஆந்திராவை சேர்ந்த நரசிம்மலு, சிவகுமாருக்கு எதிராக பேசுகிறார். இதுவே கடைசி எச்சரிக்கை. திரைத்துறையினர் வாயை மூடி கொண்டு தங்கள் வேலையை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஷ்மிகா மந்தனா குடகின் விராஜ்பேட்டையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.