/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கங்கா கல்யாண் திட்டத்தில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்
/
கங்கா கல்யாண் திட்டத்தில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்
கங்கா கல்யாண் திட்டத்தில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்
கங்கா கல்யாண் திட்டத்தில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்
ADDED : மார் 06, 2025 12:21 AM

பெங்களூரு:''கங்கா கல்யாண்' திட்டத்தின் கீழ், கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் மஹாதேவப்பா கூறினார்.
சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் சுனில்குமார், சந்துரு லமானி எழுப்பிய கேள்விக்கு, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா அளித்த பதில்:
'கங்கா கல்யாண்' திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, பா.ஜ., உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். கூடுதல் ஆழ்துளை கிணறுகளை அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கங்கா கல்யாண் திட்டத்தின் இயற்பியல் இலக்கை அதிகரித்தல், நில உரிமை திட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உறுப்பினர்கள் கூறும் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். செய்ய முடிந்தவற்றை கண்டிப்பாக செய்வோம்.
கங்கா கல்யாண் திட்டத்தில் விஜயபுராவில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பின், தவறு செய்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.