/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கருப்பு கோட்டுக்கு விலக்கு வக்கீல் சங்கம் வேண்டுகோள்
/
கருப்பு கோட்டுக்கு விலக்கு வக்கீல் சங்கம் வேண்டுகோள்
கருப்பு கோட்டுக்கு விலக்கு வக்கீல் சங்கம் வேண்டுகோள்
கருப்பு கோட்டுக்கு விலக்கு வக்கீல் சங்கம் வேண்டுகோள்
ADDED : மார் 10, 2025 09:43 PM

பெங்களூரு: வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், அண்டை மாநிலங்களை போன்று, கர்நாடகாவிலும் கருப்பு கோட் அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, தலைமை நீதிபதி அஞ்சாரியாவுக்கு, பெங்களூரு வக்கீல்கள் சங்கம் எழுதிய கடிதம்:
மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாவட்ட நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் குளிர்சாதன வசதி இல்லை.
வெப்பம் அதிகம் இருக்கும்போது, வெள்ளை சட்டை மீது கருப்பு கோட், கழுத்து பட்டை அணிந்து வாதாடுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
அண்டை மாநிலங்களான மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கோடை காலம் முடியும் வரை, வக்கீல்கள் கருப்பு கோட் அணிவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இங்குள்ள வக்கீல்களுக்கும் கருப்பு கோட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.