/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மார்ச் 25 முதல் போராட்டம் பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை
/
மார்ச் 25 முதல் போராட்டம் பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை
மார்ச் 25 முதல் போராட்டம் பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை
மார்ச் 25 முதல் போராட்டம் பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை
ADDED : மார் 07, 2025 10:55 PM
பெங்களூரு: தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்தபடி, அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியத்தை, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவதாக கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உட்பட, நான்கு போக்குவரத்து கழகங்களும் எச்சரித்துள்ளன.
இது குறித்து, போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கும் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கியும், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முன் வரவில்லை.
அரசு ஊழியர்களை போன்று, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், சமமான ஊதியம் வழங்க வேண்டும். 38 மாத ஊதிய பாக்கியை வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களின் ஊழியர்கள் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
2021ல் போராட்டம் நடத்திய போது, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உட்பட, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை, மார்ச் 22 க்குள் அரசு நிறைவேற்றா விட்டால் மார்ச் 25ம் தேதி ஊழியர்கள் ஆலோசனை நடத்தி, போராட்டத்தில் இறங்குவோம். முதற்கட்டமாக போராட்டம் நடக்கும். அதற்கு அரசு பணியாவிட்டால், உண்ணாவிரத சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோம். கே.எஸ்.ஆர்.டி.சி., -- பி.எம்.டி.சி., உட்பட, நான்கு போக்குவரத்து கழக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.