/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாக்குறுதி திட்ட கமிட்டி உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்து: அரசுக்கு நோட்டீஸ்

ADDED : பிப் 28, 2025 05:58 AM
பெங்களூரு: வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த, அமைக்கப்பட்ட கமிட்டிக்கு அமைச்சரவை அந்தஸ்து அளித்தது குறித்து, கேள்வி எழுப்பிய மனு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், 'சக்தி', 'கிரஹ லட்சுமி', 'கிரஹ ஜோதி', 'அன்னபாக்யா', 'யுவநிதி' என, ஐந்து வாக்குறுதி திட்டங்களை கட்டம், கட்டமாக செயல்படுத்தியது. திட்டங்களில் குளறுபடிகள், ஊழல் நடக்கிறது. உண்மையான பயனாளிகளை சென்றடையவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், மாநில அரசு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டியில் உள்ள உறுப்பினர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டிக்கு, அமைச்சரவை அந்தஸ்து அளிப்பது சரியல்ல. அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கேள்வி எழுப்பி, பா.ஜ.,வின் ராஜிவ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மாநில அரசுக்கும், பிரதிவாதிகளான கமிட்டி உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.