/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நகர எரிவாயு திட்டம் தொழில் துறைக்கு உகந்தது'
/
'நகர எரிவாயு திட்டம் தொழில் துறைக்கு உகந்தது'
ADDED : மார் 05, 2025 07:16 AM
பெங்களூரு: “நகர எரிவாயு திட்டம் தொழில்துறைக்கு உகந்தது,” என, அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.
மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் அருண், எரிவாயு வினியோக திட்டம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பதில்:
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 பகுதிகளில் எரிவாயு வினியோக திட்டத்தை செயல்படுத்த, எட்டு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை ஆணையம்தெரிவித்துள்ளது.
வீடு, வணிக, தொழில்துறை துறைகளுக்கு குழாய் மூலம், இயற்கை எரிவாயு வழங்குவது எரிவாயு வினியோக நிறுவனங்களின் பொறுப்பு. மத்திய அரசு நகர எரிவாயு திட்டத்தை, பொது பயன்பாட்டு திட்டமாக கருதுகிறது.
இந்த திட்டம் மாநிலத்தின் நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலர், நகர எரிவாயு திட்டத்திற்கு சீரான கட்டமைப்பை உருவாக்க கொள்கை உருவாக்கும்படி கூறி உள்ளார்.
இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பது கொள்கையின் முக்கிய நோக்கம். நிதி துறையுடன் கலந்து ஆலோசித்து கொள்கை தயாரிக்கப்படும். பின், அமைச்சரவை ஒப்புதலுடன் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.