/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூங்காவில் உள்ள போர்வெல்கள் அறிக்கை கேட்கும் மாநகராட்சி
/
பூங்காவில் உள்ள போர்வெல்கள் அறிக்கை கேட்கும் மாநகராட்சி
பூங்காவில் உள்ள போர்வெல்கள் அறிக்கை கேட்கும் மாநகராட்சி
பூங்காவில் உள்ள போர்வெல்கள் அறிக்கை கேட்கும் மாநகராட்சி
ADDED : பிப் 25, 2025 10:34 PM
பெங்களூரு: கோடைக்காலம் துவங்குவதால் பூங்காக்களின் போர்வெல்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
கோடைக்காலம் துவங்குவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் உள்ள போர்வெல்களின் நிலை குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும்.
எத்தனை போர்வெல்கள் நல்ல நிலையில் உள்ளன; எத்தனை போர்வெல்கள் வற்றியுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
போர்வெல்கள் பழுதடைந்துள்ள பூங்காக்களில், உடனடியாக தண்ணீர் வசதி செய்ய வேண்டும். குடிநீர் வாரியத்துடன் பேசி, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை டேங்கர் மூலம் பூங்காக்களின் மரங்கள், தாவரங்களுக்கு பாய்ச்ச ஏற்பாடு செய்யுங்கள்.
கோடைக்காலம் துவங்குகிறது. பூங்காக்களுக்கு தண்ணீர் அவசியம். எவ்வளவு நீர் தேவைப்படும், எத்தனை டேங்கர்கள் தேவைப்படும் என்பதை தெரிந்து கொண்டு, உடனடி நடவடிக்கை எடுங்கள்.
பூங்காக்களில் மரங்களின் இலைகள் உதிர்கின்றன. பல்வேறு இடங்களில் உலர்ந்த இலைகள் குவிந்து கிடக்கும். இத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, இலைகளை அப்புறப்படுத்துங்கள்.
பெங்களூரில் 1,270 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 100 பூங்காக்களில் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. விரைவில் பணிகள் முடியும். அதன்பின் பூங்காக்களில் உதிரும் இலை, தழைகளை அந்தந்த பூங்காவிலேயே உரமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

