/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் சிவகுமார் குடும்பத்துடன் துபாய் பயணம்
/
துணை முதல்வர் சிவகுமார் குடும்பத்துடன் துபாய் பயணம்
துணை முதல்வர் சிவகுமார் குடும்பத்துடன் துபாய் பயணம்
துணை முதல்வர் சிவகுமார் குடும்பத்துடன் துபாய் பயணம்
ADDED : பிப் 22, 2025 05:16 AM

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் சிவகுமார், தன் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.
கர்நாடக காங்கிரசில், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம், முதல்வர் மாற்றம் என, பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன. நிதி அமைச்சரான, முதல்வர் சித்தராமையா 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகிறார். துறை ரீதியாக ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின், அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கட்சியினர் கருதுகின்றனர். சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்கள் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.
அமைச்சர் பதவி பறிபோகும் பீதியில் உள்ளவர்கள், அமைச்சர் பதவி எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு நடையாய் நடக்கின்றனர். மேலிட தலைவர்களை சந்தித்து, இம்முறை தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கோருகின்றனர்.
கர்நாடகாவில் அரசியல் பரபரப்புக்கிடையில், துணை முதல்வர் சிவகுமார், தன் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். நான்கைந்து நாட்களில் அவர் பெங்களூரு திரும்புவார் என, தெரிகிறது. அதன்பின் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்பார்.

