/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என் மீது பலாத்கார வழக்கு போடாதீர்கள்! சிவகுமாருக்கு முனிரத்னா கோரிக்கை
/
என் மீது பலாத்கார வழக்கு போடாதீர்கள்! சிவகுமாருக்கு முனிரத்னா கோரிக்கை
என் மீது பலாத்கார வழக்கு போடாதீர்கள்! சிவகுமாருக்கு முனிரத்னா கோரிக்கை
என் மீது பலாத்கார வழக்கு போடாதீர்கள்! சிவகுமாருக்கு முனிரத்னா கோரிக்கை
ADDED : மார் 05, 2025 11:11 PM

பெங்களூரு: “என்னை சிறைக்கு அனுப்பியதே, துணை முதல்வர் சிவகுமார்தான். தயவு செய்து என் மீது, பலாத்கார வழக்கு போட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்,” என பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசு எஸ்.சி., -- எஸ்.டி., மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை கண்டித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.க்கள், பெங்களூரின் சுதந்திர பூங்காவில், நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற முனிரத்னா அளித்த பேட்டி:
எங்களின் திரையுலகினருக்கு நட்டு, போல்டுகள் டைட் செய்ய வேண்டியது இல்லை. பணம் விழுங்கியவர்களை லுலு மாலுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் நட்டு, போல்டை டைட் செய்யுங்கள்.
அனைத்து இடங்களிலும், பணத்தை விழுங்குகிறீர்கள். பெங்களூரு மாநகராட்சி போதவில்லை, பி.டி.ஏ., போதவில்லை, குடிநீர் வாரியம் போதவில்லை. இன்னும் எவ்வளவு வேண்டும்?
எஸ்.சி., - எஸ்.டி.,யினரின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விழுங்கினால், அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது. வாக்குறுதித் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட முடியவில்லை.
பெங்களூரு நாற்றம் எடுக்கிறது. எங்களை விடுங்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் முகத்தை பார்க்க முடியவில்லை. எதை கேட்டாலும் தலையாட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், எஸ்.சி., - எஸ்.டி.,யினர் பணத்தை விழுங்கியுள்ளனர். இந்த பணத்தை வேறு மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளனர். வேறு நோக்கத்துக்கு பயன்படுத்தியுள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள் மீது, மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் சூழ்நிலை சரியில்லை. எங்களின் கதி என்ன? நாங்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்.
என் மீது பலாத்கார வழக்குகளை போடாதீர்கள். தலித் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அட்ராசிட்டி வழக்கு போடாதீர்கள். இத்தகைய வழக்குகளை போட வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.