தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, பதிவு 5 சதவீதம் கட்டணம் உயர்வு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, பதிவு 5 சதவீதம் கட்டணம் உயர்வு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, பதிவு 5 சதவீதம் கட்டணம் உயர்வு


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடப்பு 2026 – 27ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு கட்டணமும், பதிவு கட்டணத்தையும், பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீடு வாரியம், 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.

பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடப்பு 2026 – 27ம் கல்வியாண்டில் முதல் முறையாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்களின் கட்டணம், 710 ரூபாயில் இருந்து 746 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதுபோல, தனித் தேர்வர்களுக்கான பதிவு மற்றும் விண்ணப்ப கட்டணம், 248 ரூபாயில் இருந்து 260 ரூபாய்; மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கான பதிவை புதுப்பிக்கும் கட்டணம் 72 ரூபாயில் இருந்து 76 ரூபாயாகவும் திருத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு பாடத்துக்கான கட்டணம், 448 ரூபாயில் இருந்து, 470 ரூபாய்; இரண்டு பாடங்களுக்கு 559 ரூபாயில் இருந்து 587 ரூபாய்; மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு 752 ரூபாயில் இருந்து 790 ரூபாயாகவும் திருத்தப்பட்டுள்ளது.தேர்வுகளை நடத்த ஏற்படும் செலவுகளை கருதி, இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us