/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்களுக்கு பி.எம்.டி.சி.,யில் இலவச பயணம்
/
மாணவர்களுக்கு பி.எம்.டி.சி.,யில் இலவச பயணம்
ADDED : பிப் 25, 2025 05:27 AM
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தேர்வு எழுத செல்லும் போது பி.எம்.டி.சி., பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்க உள்ளது. தேர்வுக்கு செல்வோர் பி.எம்.டி.சி., பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என பி.எம்.டி.சி., தெரிவித்து உள்ளது.
பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்யும் போது, மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை நடத்துநரிடம் கட்டாயம் காண்பிக்கவும். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு விரைவாக செல்லும் வகையில், அதன் அருகே, பஸ்கள் நிறுத்தப்படும்.
இதன் மூலம், மாணவர்கள் கால தாமதமாக தேர்வுக்கு செல்வது தவிர்க்கப்படும். வால்வோ பஸ்களைத் தவிர, மீதமுள்ள அனைத்து வகையான பஸ்களிலும் இலவசமாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இத்திட்டத்தை பி.எம்.டி.சி.,யை தவிர மற்ற மூன்று போக்குவரத்து கழகங்களிலும், அமல்படுத்துவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.

