/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மீண்டும் இரண்டு மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
/
மீண்டும் இரண்டு மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
மீண்டும் இரண்டு மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
மீண்டும் இரண்டு மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
ADDED : பிப் 28, 2025 11:04 PM

பெங்களூரு: கர்நாடக அரசு அனுப்பிய மேலும் இரண்டு மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பி உள்ளார்.
மக்களுக்கு கடன் கொடுத்து, பலவந்தமாக பணம் வசூலிப்பது, நிதி நிறுவனங்கள் தொல்லை தாங்காமல், தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இத்தகைய மைக்ரோ நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசு, அவசர சட்டம் வகுத்தது. இதை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் கையெழுத்துக்கு அனுப்பியது.
ஆனால் அதில் கையெழுத்திடாமல் அரசுக்கே அவர் திருப்பி அனுப்பினார். அவசர சட்டத்தில் கடன் வாங்கியவர்களின் நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என, ஆட்சேபம் தெரிவித்தார்.
அதன்பின் விளக்கங்களை தெளிவுபடுத்தி, அரசு மீண்டும் அனுப்பியது. கவர்னரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பல்கலைக்கழக திருத்த மசோதா - 2024ஐ கவர்னர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார்.
பல்கலைக்கழகங்களில் கவர்னர் அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக, ஆட்சேபனை தெரிவித்தார்.
தற்போது அரசு அனுப்பியிருந்த கர்நாடக கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா - 2024; கர்நாடக கூட்டுறவு அமைப்பு திருத்த மசோதா - 2024 ஆகியவற்றில் கையெழுத்திடாமல், கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இவற்றில் சில விளக்கங்கள் கேட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நோக்கில், அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு கவர்னர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டுரிமை அளித்தால். சங்கத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததாக ஆகிவிடும்.
உறுப்பினர்களின் உரிமை பின் வாசல் வழியாக பறிக்கப்படுகிறது. இது கூட்டுறவு துறையை பலவீனமாக்கும் என, கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார்.