தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கிரஹ ஆரோக்கியா' திட்டம் பெங்களூருக்கும் விஸ்தரிப்பு

 'கிரஹ ஆரோக்கியா' திட்டம் பெங்களூருக்கும் விஸ்தரிப்பு

 'கிரஹ ஆரோக்கியா' திட்டம் பெங்களூருக்கும் விஸ்தரிப்பு


ADDED : பிப் 01, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இதுவரை கிராமங்களில் மட்டும் செயல்பட்டு வந்த, 'கிரஹ ஆரோக்கியா' திட்டத்தை, பெங்களூருக்கும் விஸ்தரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது;

நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், 2024 அக்டோபரில் கோலார் மாவட்டத்தில், 'கிரஹ ஆரோக்கியா' திட்டம் துவக்கப்பட்டது. 2025 ஜூனில் மாநிலம் முழுதும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது கிராமங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுகிறது. கிராமப்புறங்களில் சுகாதார அதிகாரிகள், ஆஷா ஊழியர்கள், ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று, 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான மாத்திரைகள் வழங்குவர்.

இவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்படும். இப்பணிக்கு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நம்ம கிளினிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. கிராமப்புறத்தில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நீரிழிவு, ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், மனநலம் பாதிப்பு, சிறுநீர் பிரச்னை, கண் பாதிப்பு, ரத்த சோகை உட்பட, பல்வேறு நோய்களை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை கிராமங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த, 'கிரஹ ஆரோக்கியா' திட்டத்தை, பெங்களூரு மாநகருக்கும் விஸ்தரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தயாராகி வருகிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள், குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us