/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒயின் கடைகளில் அருந்த அனுமதிக்க வலியுறுத்தல்
/
ஒயின் கடைகளில் அருந்த அனுமதிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 28, 2025 10:59 PM
பெங்களூரு: கர்நாடக மாநில ஒயின் வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் கோவிந்தராஜா ஹெக்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
ஒயின் ஷாப்களில் ஒயின் அருந்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும், இந்த ஷாப்களின் அருகிலேயே சிறிய கவுண்டர் திறந்து, பொட்டலத்தில் உணவு வினியோகிக்க வேண்டும்.
ஒயின் குடிப்பதற்காக, ஏழைகளால் பிற மதுக்கடைகளுக்கு செல்ல முடியாது. எனவே, ஒயின் ஷாப் அருகிலேயே ஒரு கவுன்டரை திறந்து, உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும். இதனால் பொது இடத்தில் அமர்ந்து குடிப்பதும், ஒயின் ஷாப் வெளியே நின்று குடிப்பதும் தவிர்க்கப்படும்.
இதுவே ஒயின் ஷாப்களிலேயே கவுன்டர் திறக்கப்பட்டால், மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் அதிகரிக்கும். தேவைப்பட்டால், மதுக்கடையின் முதல் தளத்தில் உள்ள மதுபான விற்பனை கவுன்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.
கலால் உரிமம் வழங்கக்கூடாது என, 2024 செப்டம்பரில் கலால் துறையிடம் வலியுறுத்தினோம். பட்ஜெட்டுக்கு முந்தையக்கு கூட்டத்தில், இப்பிரச்னையை எழுப்பினோம்.
உடுப்பி, மங்களூரு மட்டுமல்ல, மாநிலம் முழுதும் கோவா மதுபானங்கள் பரவி உள்ளன. கோவா மதுபானம் என்ற பெயரில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அதிகாரிகளும், 'அரசுக்கு வருவாய் தேவைப்படுகிறது. கோவா மதுபானங்களை விற்பனை செய்யுங்கள்' என்று எங்களை வலியுறுத்துகின்றனர். எந்த மதுபானம் வாங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.