/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக தயாரிப்பில் கன்னடம் கட்டாயம்
/
கர்நாடக தயாரிப்பில் கன்னடம் கட்டாயம்
ADDED : மார் 02, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கன்னட மொழியின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், கன்னடர்களுக்கு அனைத்து துறைகளிலும் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், கன்னட மொழி மேம்பாட்டு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
'
இந்த சட்டத்தின்படி, மாநிலத்திற்குள் தயாரிக்கப்படும், விற்கப்படும் அனைத்து தொழில் துறை மற்றும் நுகர்வோர் பொருட்களின் பெயர்கள், அவற்றின் பயன்பாட்டு வழிமுறைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும்.
இது, அரசு மற்றும் தனியார் தயாரிப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.