/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பராமரிப்பு பணி ஓசூர் மேம்பாலத்தில் தடை
/
பராமரிப்பு பணி ஓசூர் மேம்பாலத்தில் தடை
ADDED : மார் 06, 2025 12:42 AM
பெங்களூரு:பெங்களூரு - ஓசூர் பிரதான சாலையில், மடிவாளாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை, 10 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் உள்ளது.
2010ல் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தால், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில், பெங்களூரு நகர போக்குவரத்து துணை கமிஷனர் சிவபிரகாஷ் தேவராஜு, வெளியிட்டு உள்ள அறிக்கை:
ஓசூர் பிரதான சாலையில் அமைந்து உள்ள எலிவேட்டேட் மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கி உள்ளன. எனவே, அடுத்த உத்தரவு வரும் வரை, தினமும் இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இந்த மேம்பாலத்தில் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, அனைத்து வகையான வாகனங்களும் செல்லலாம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.