தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.பி.எஸ்.சி., முறைகேடு: சிவசங்கரப்பா, கீதாவுக்கு 14 நாள் காவல்

கே.பி.எஸ்.சி., முறைகேடு: சிவசங்கரப்பா, கீதாவுக்கு 14 நாள் காவல்

கே.பி.எஸ்.சி., முறைகேடு: சிவசங்கரப்பா, கீதாவுக்கு 14 நாள் காவல்


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சிவசங்கரப்பா, கீதாவுக்கு, 14 நாள் அமலாக்க துறை காவலில் வைக்க, அமலாக்க துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கே.பி.எஸ்.சி., கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கில், முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாஹுகர், உறுப்பினர் கீதாவை, அமலாக்க துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும், நேற்று பி.எம்.எல்.ஏ., எனும் பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, அமலாக்க துறை தரப்பு வக்கீல் மதுராவ் வாதிட்டதாவது:

வினாத்தாள், விடைகளை வழங்க, தேர்வர்களிடம் 70 லட்சம் ரூபாய் பெறப்பட்டு உள்ளன. ஜன., 9ம் தேதி தேர்வுக்கு முந்தைய நாள், கே.பி.எஸ்.சி., தலைவர், சில தேர்வர்களுடன் பேசி உள்ளார்.

ஐ.எப்.எஸ்., தேர்வுகளில் தங்கப்பதக்கம் வென்ற தேர்வர்கள், 350 மதிப்பெண் பெறவே சிரமப்படுகின்றனர். ஆனால், கல்லுாரியில் குறைந்த மதிப்புடன் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற ஒருவர், கே.பி.எஸ்.சி., தேர்வில், 450 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த ஞானேந்திரகுமார், தலைவராக இருந்த சிவசங்கரப்பாவின் தொடர்பு குறித்து தகவல் அளித்து உள்ளார்.

2022 முதல் கே.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட 13 தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, விசாரணையின் போது, ஞானேந்திரகுமார் தெரிவித்து உள்ளார்.

கே.பி.எஸ்.சி., அலுவலகம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிவசங்கரப்பா சாஹுகர் வீடு, தேர்வில் தேர்ச்சி பெற்ற சில தேர்வர்களின் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கையெழுத்திடப்பட்ட சில வெற்று காசோலைகள் கிடைத்தன. வினாத்தாள் கசிவு, விடைத்தாள், பண பரிவர்த்தனை, தேர்வர்கள் தேர்வு தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே, இருவரைம் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு சிவசங்கரப்பா சாஹுகர் தரப்பு வக்கீல் பிரசன்னா வாதிடுகையில், ‘‘என் மனுதாரர் மூத்த குடிமகன்.

‘ ‘அவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார். ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்,’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சிவசங்கரப்பா, கீதாவை 14 நாட்கள் அமலாக்க துறை காவலில் எடுக்க உத்தரவிடப்படுகிறது என, உத்தரவிட்டது.

அப்போது கீதா, ‘நவராத்திரியின் போது விரதம் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று வக்கீல் மூலம் கேட்டு கொண்டார். ஆனால், அமலாக்க துறை அனுமதி மறுத்துவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us