sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மன்மோகன் சிங்குக்கு சட்டசபை, மேல்சபையில் புகழாரம்

/

மன்மோகன் சிங்குக்கு சட்டசபை, மேல்சபையில் புகழாரம்

மன்மோகன் சிங்குக்கு சட்டசபை, மேல்சபையில் புகழாரம்

மன்மோகன் சிங்குக்கு சட்டசபை, மேல்சபையில் புகழாரம்


ADDED : மார் 04, 2025 04:47 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் எம்.பி., சீனிவாஸ், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல் உட்பட பலருக்கு சட்டசபை, மேல்சபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டசபை கூடியதும், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் காதர் கொண்டு வந்தார்; அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

மன்மோகன் சிங் குறித்து அவர் பேசியதாவது:

மன்மோகன் சிங் 1932 செப்டம்பர் 26ம் தேதி, பஞ்சாபில் பிறந்தவர்; உயர் கல்வி படித்தவர். டில்லியின் பிரபலமான பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். வர்த்தக வரித்துறையில் பொருளாதார ஆலோசகர், திட்டக்குழுத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியில் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பிரதமர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

கடந்த 1991 முதல் 2019 வரை அசாம் மாநிலத்தில் இருந்தும்; 2019 முதல் 2024 வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1991 முதல் 1996 வரை, மத்திய நிதித்துறை அமைச்சராக பணியாற்றியபோது, அவர் வகுத்த பொருளாதார மேம்பாடுகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது.

ஆதார் அடையாள அட்டை, கிராம வேலை உறுதி, தேசிய சுகாதார திட்டம் உட்பட, பல திட்டங்களை கொண்டு வந்தார். இரண்டு முறை பிரதமராக இருந்தவர். மிகவும் நெருக்கடியான நேரத்தில், மத்திய நிதித்துறை அமைச்சரான மன்மோகன்சிங், பொருளாதாரத்தில் புரட்சிகரமான மேம்பாடுகளை கொண்டு வந்தார். 2024 டிசம்பர் 26ம் தேதி காலமானார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதே போன்று, மேல்சபையிலும் மன்மோகன் சிங் உட்பட, மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us